HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

பொங்கல் வழிபாட்டு முறை

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR

பொங்கல் வழிபாட்டு முறை


பொங்கல் ஐதீகம் !!



வடக்கு திசையில் பொங்கினால் பண வரவு

தெற்கே திசையில் பொங்கினால் செலவு

கிழக்கே திசையில் பொங்கினால் சுபகாரியங்கள் இனிதே நடைபெறும்

மேற்கே திசையில் பொங்கினால் மகிழ்ச்சி

 தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில், சுப ஓரைகளில் சூரிய பகவானுக்கு பூஜை செய்தால், ஸ்ரீஅஷ்ட லஷ்மிகளும் நம் வீட்டில் வாசம் செய்வார்கள்.

 
 பொங்கலை வீட்டு வாசலில் வைப்பதே சிறப்பாகும். காலையில் நல்ல நேரம் பார்த்து, வீட்டு முற்றத்தில் பெரிய அளவிலான குத்து விளக்கு ஏற்றுங்கள்.

 விளக்கிற்கு பூ சூட்டி அலங்கரியுங்கள். விளக்கை ஏற்றி வையுங்கள் இல்லையேல், நிறைவிளக்காக வைத்தால் போதும். விளக்கின் முன் பெரிய வாழை இலை விரித்து, வலது ஓரத்தில் சாணப்பிள்ளையாரையும், செம்மண்ணைப் பிடித்து அம்பாளாகக் கருதி பிள்ளையார் அருகிலும் வையுங்கள்.

 இடது ஓரத்தில் நாழி நிறைய பச்சை நெல் வைக்க வேண்டும். இலையில் பச்சரிசி, கத்தரிக்காய், கருணைக்கிழங்கு, சிறுகிழங்கு, வள்ளிக்கிழங்கு, அவரைக்காய், சீனிஅவரை, பூசணித் துண்டு, பிடிகிழங்கு, காப்பரிசி (வெல்லம், பச்சரிசி கலவை) வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள்கிழங்கு, வாழைப்பழம், படைக்கவேண்டும். இரண்டு கரும்புகளை தோகையுடன் நிற்கும் படி கட்டி வையுங்கள். பச்சரிசி, வெல்லம், பழம், தேங்காய் சேர்த்து தயாரித்த காப்பரிசியை ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பச்சரிசி களைந்த நீரை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். பொங்கல் பானையை மண்அடுப்பு அல்லது பொங்கல் கட்டி எனப்படும் கற்கள் மீது வைக்க வேண்டும். ஒரு பானையில் மஞ்சள் குலை கட்டி அடுப்பில் வையுங்கள். திருவிளக்கிற்கு பத்தி, கற்பூர ஆரத்தி காட்டியபிறகு, உங்கள் குல தெய்வம் இருக்கும் கோயிலின் திசையை நோக்கி காட்டுங்கள்.

 பின்னர் சூரியபகவானுக்கு ஆரத்தி காட்டியதும், தேங்காய் உடைத்து, அதிலுள்ள தண்ணீரை பானையில் விடுங்கள். சூடம் ஏற்றி அடுப்பு பற்ற வையுங்கள். மண்ணெண்ணெய் விட்டு அடுப்பு பற்ற வைப்பதைத் தவிர்க்கவும்.

 பச்சரிசி களைந்த நீரை பானையில் ஊற்றுங்கள். தேவையானால், சிறிதளவு பசும்பால் சேர்க்கலாம். தண்ணீர் கொதித்து பொங்கியவுடன், பொங்கலோ பொங்கல் எனச் சொல்லி குலவையிடுங்கள். கொதித்த தண்ணீரை, எவ்வளவு அரிசி பொங்க இருக்கிறோமோ, அந்தளவுக்கு எடுத்து விட்டு பச்சரிசியை இடுங்கள். நேரம் செல்லச் செல்ல தீயின் அளவைக் குறைத்து விடுவது அவசியம். இல்லாவிட்டால், சாதம் பானையில் பிடிக்கும்.பொங்கல் தயாரானதும் இறக்கி விடுங்கள். பின்பு, அதே அடுப்பில் சர்க்கரைப் பொங்கல் தயார் செய்து விடுங்கள். பொங்கல் பானைகளை விளக்கின் முன் வைத்து, பூஜை செய்யுங்கள்.

 சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம், பிற ஸ்லோகங்கள், பாடல்களைப் பாடுங்கள். முதலில், பொங்கல், பழம் ஆகியவற்றை ஒரு இலையில் வைத்து காகத்துக்கு வைக்க வேண்டும். காகம் உணவை எடுத்த பிறகு, குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் கொடுக்க வேண்டும். அதன்பிறகே பெரியவர்கள் சாப்பிட வேண்டும். மதிய வேளையில், காய்கறி சமைத்ததும், திருவிளக்கேற்றி, ஒரு இலை விரித்து பொங்கல், சர்க்கரைப் பொங்கல், காய்கறி வகைகளை இலையில் வைக்க வேண்டும். அதை முன்னோருக்கு சமர்ப்பித்து பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் ஒற்றுமையுடன் சாப்பிட வேண்டும்.

 வீட்டு வாசலில் பொங்கல் வைக்க வசதியில்லாவிட்டால், தெருமக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் இணைந்து பொங்கல் வைக்க வேண்டும். ஊர் மக்கள் ஒன்று கூடி கோவில்களிலும் பொங்கல் வைத்து வழிபடலாம்.

மாட்டுப்பொங்கல்



மாட்டுப்பொங்கல் வழிபடும் முறை


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகர்க்கு

என்ற வள்ளுவம் தமிழரிடத்து என்றும் வாழ்ந்திருக்கிறது.

 மனிதர்களிடம் மட்டுமில்லை, விலங்குகளுக்கும் அந்நன்றியைக் காட்டியிருக்கிறார்கள் தமிழர்கள். பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது.

 பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உறைவதாகப் பெரியோர் கள் கூறுகின்றனர். எனவே பசுவை வணங்குவதன் மூலம், அனைத்து தேவர்களின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கின்றன.

 மாட்டுப்பொங்கலன்று, நல்லெண்ணெய் தேய்த்து குளித்து, மாட்டுப்பொங்கல் அன்று தொழுவத்தை தூய்மைப்படுத்தி கோலம் போட்டு, நல்ல நேரத்தில் ஒரு பெரிய பானையில் பொங்கலிடும்போதே, அதிலிருந்து பொங்கல் தண்ணீர் என்று கொஞ்சம் தண்ணீரை ஒரு பெரிய சொம்பில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

 வீட்டிலுள்ள கத்தி, கடப்பாறை, படி, அரிவாள்மனை போன்ற உழவுக்கும், சமையலுக்கும் உதவும் எல்லா பொருள்களையும் கழுவிக் காயவைத்து பூசை, பொட்டிட்டு பொங்கல் மேடையில் வைத்துவிடுங்கள்.

 இதுதவிர வீட்டிலுள்ள வாகனங்களை கழுவி துடைத்து பூசை, பொட்டிட்டு, சந்தனம் தெளித்துவிட்டு, வாழைக்கன்றுகள், தோரணம், மாவிலை மாலைகள் போடப்பட்டு, பலூன்கள் கட்டுங்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் மோட்டார் பம்பு செட் உட்பட அனைத்து கருவிகளையும் பொட்டிட்டு அழகுபடுத்துங்கள்.

 வண்டியிழுக்க செய்வது காளைமாட்டிற்கும், காலை மாலை பால்தருவது பசுமாட்டிற்கும், எருமை மாடுகளுக்கும், ஆடுகளுக்கும் கொம்புகளை சீவிவிட்டு, குளிப்பாட்டி, வண்ணங்களை ( paint ) கொம்புகளில் அடித்திடுங்கள். கொம்புகளின் இடையில் பலவண்ண ரிப்பன்கள், குஞ்சம், சலங்கை, பலூன்களை கட்டி, நெற்றியில் மஞ்சள் குங்குமம், சந்தனம், கழுத்தில் தோரணம், மாவிலை மாலை போட்டு புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக்கயிறு அணிவித்திடுங்கள்.

 தாம்பாளத் தட்டுகளில் தோட்டத்தில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வையுங்கள். பொங்கல் பொங்கும் போது பொங்கலோ பொங்கல் மாட்டுப் பொங்கல் என்று எல்லோரும் குரல் கொடுத்து சாமி கும்பிட்டு கற்பூர தீபாராதனை காட்டுங்கள். அதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் பிரசாதத்தை ஊட்டிவிடுங்கள். பிறகு மாடுகளை சுத்தி திருஷ்டி கழித்து விட்டு வழிபடுங்கள்.

 உழுவதிலிருந்து உழுத நிலத்திற்கு தனது சாணத்தை இயற்கை உரமாகத் தந்தும், அடுப்பெரிக்க, ஏரிழுக்க, பரம்படிக்க, நீரிறைக்க, போரடிக்க என்று எத்தனையோ வேலைகளில் மனிதனுக்கு உதவி, எண்ணற்ற விதங்களில் மாடுகள் நமக்கு பயன்படுகிறது.

 சில வீடுகளில் கால்நடைகளுக்கு காலையிலேயே பூஜை செய்துவிடுவார்கள். சிலர் மாலையில் விளக்கு வைக்கும் நேரத்தில் பூஜை செய்து அதன்பின் கால்நடைகளை சற்று வெளியே ஓட்டிப் போய் திரும்ப வீட்டுக்கு கூட்டி வருவார்கள். வீட்டுக்கு திரும்பக் கொண்டு வரும்போது வீட்டு நிலைப்படியில் உலக்கையை வைத்துஅதைத் தாண்டிப் போகுமாறு அழைத்துச் செல்வது வழக்கம்.

சிறுவீட்டுப் பொங்கல்!


 குழந்தைகளுக்கான பொங்கலை சிறுவீட்டுப் பொங்கல் என்பர். தை மாதத்தில் வரும் ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் இந்த பொங்கலை வைக்கலாம். அதிகாலையில் வாசலில் சாணப்பிள்ளையார் பிடிப்பது போல, சாணத்தை உருட்டி வைத்து அதில் பூவரசு, பூசணி, செம்பருத்திப் பூக்களால் அலங்கரிக்க வேண்டும். மணலால் சிறுவீடு போல ஓவியம் வரைந்து, அதன் நடுவே பொங்கல் பானை வைத்து பொங்கலிட வேண்டும். ஒரு முறத்தின்(சுளவு) பின்பக்கம் சிறு சிறு வாழை இலையை விரித்து அதில் சிறிதளவு பொங்கல், பழம் வைத்து அதன் மீது கற்பூரம் ஏற்றி நீர்நிலையில் மிதக்க விட வேண்டும். கங்காதேவிக்கு பூஜை செய்வதுடன், தண்ணீரில் வாழும் மீன் முதலான உயிர்களுக்கு தானம் செய்த புண்ணியமும் நமக்கு கிடைக்கும். அன்று மதியம் குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும். குழந்தைகளை சிறுவீட்டு பொங்கல் வைக்க உதவச் செய்வது மேலும் சிறப்பு.

Post a Comment

0 Comments