♥80களிலும், 90களிலும் பிறந்தவர்கள் பாக்கியம் செய்தவர்கள் என்றே கூறலாம்.

ஒரு காலத்துல இதையும் நம்பினோம் :

♥பொய் சொன்னா சாமி கண்ண குத்தும்.

♥வெத்தலை, பாக்கு போட்டால் மாடு முட்டும்.

♥தாலி கட்டுனா குழந்தை பிறக்கும்.

♥சாப்பிடலேனா பூச்சாண்டி புடிச்சுட்டு போயிடுவான்.

♥ஒரு டைம் முட்டுனா தலையில கொம்பு முளைக்கும்.

♥அரிசி தின்னா கல்யாணத்து அன்னைக்கு மழை பெய்யும்.

♥எந்த ஆபத்தில் இருந்தாலும் சக்திமான்னு சொன்னா வந்து காப்பாற்றுவார்.

♥பார்க்க வச்சு சாப்பிட்டா வயிறு வலிக்கும்.

♥ஒத்த மைனா பார்த்தா ஸ்கூல்ல டீச்சர் கிட்ட அடி விழும்...

♥ரெட்டை மைனா பார்த்தா லக்கு...

♥இரவு நேரத்தில் தனியாக செல்லும்போது என்ன சத்தம் கேட்டாலும் திரும்பிப் பார்க்கக்கூடாது. திரும்பி பார்த்தா பேய் அடித்துவிடும்.

♥அப்போ பொண்ணுங்க பக்கத்தில உக்கார வைக்குறதெல்லாம் தண்டனை.

♥ஆசுகு ஒரு டீயவ தயாரிக்கும் கம்பெனி என்று நம்பினோம். ஆனால், உண்மையில் அது டயர் கம்பெனி.

♥இடி இடிக்கும்போது அர்ஜூனா அர்ஜூனா என சொன்னால், வந்த இடி நம்மீது விழாது.

♥பென்சிலை துருவி சுடுகஞ்சியில் போட்டால், விடிவதற்குள் அது ரப்பராக மாறும்.

♥மயில் தோகையை புத்தகத்தின் நடுவில் வைத்திருந்தால், அது குட்டி போடும்.

♥டிவி, ரேடியோக்களுக்கு உள்ளே குட்டியாக ஆளுங்க இருந்து ஆடுறாங்க, பாட்டு பாடுறாங்க.

♥கால் கட்டை விரலுக்கு பக்கத்து விரல் பெரிதாக இருந்தால் அந்த பெண் புருசனுக்கு அடங்கமாட்டாள்.

♥பழங்களை விதையோடு விழுங்கினால் வயிற்றில் செடி முளைக்கும்.

♥டிவியில மகுடி சத்தம் வந்தால் மியூட் பண்ணனும். இல்லைன்னா வீட்டுக்குள் பாம்பு வந்துவிடும்.

♥ஆண்களுக்கு தலையில் ரெட்டை சுழி இருந்தால் அவர்கள் பின்னாளில் இரண்டு பொண்டாட்டிக்காரர்கள் ஆகிவிடுவார்கள்.

♥படத்தில் இறப்பவர் உண்மையாகவே இறந்து விடுவார் என நினைத்த காலமும் உண்டு.

♥முத்தம் கொடுத்து கட்டிப்பிடித்தால் குழந்தை பிறக்கும்.

♥பல் விழுந்துவிட்டால் கூரை மேல் போட்டுவிட வேண்டும். இல்லையெனில் பல் முளைக்காது.

♥வெயிலும், மழையும் ஒன்றாக வந்தால் காக்காவுக்கும், நரிக்கும் கல்யாணம் நடக்குது.

♥நாக்கு கருப்பா இருந்தா சொல்லுறது பழிக்கும்.

♥இதுபோல் இன்னும் பல விஷயங்களை சொல்லி கொண்டே போகலாம்...

♥இதை படித்தவுடன் உங்களுக்கும் மலரும் நினைவுகள் ஞாபகத்தில் வந்துவிட்டதா...!!