HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

மனைவிக்கு உள்ள சிறப்புகள்

மனைவிக்கு உள்ள சிறப்புகள்
மனைவி என்றால்
அன்பின்இன்னொரு சொல் என்றும் கொள்ளலாம்
பணிக்கு செல்லும்
மனைவிகள் எல்லாம்
குடும்பம் சுமக்கும்
அன்பு தேவதைகள்
ஆணுக்கு ஒரு பக்க
மத்தளம் என்றால்
பணிக்கு செல்லும் மனைவிகளுக்கு இரண்டு பக்க
மத்தளம்
பெண் என்கிற
கிரீடம் அழகு தான்
என்றாலும் அவளை வெளியில்
உள்ள சமூகம் கிள்ளி கொண்டேதான் இருக்கும்
கணவர்கள் கொஞ்சம்
கை கொடுங்கள்.
உங்களுக்காக வாழ்ந்துகொண்டு
இருக்கும் அந்த அன்பு பறவையை
அரவணைத்து வைத்து
கொள்ளுங்கள்
அன்பாகப் பேசுங்கள்
சமையல் பணியை நேரம் கிடைக்கும் போதெல்லாம்
பகிர்ந்து கொள்ளுங்கள்
மனைவிக்கு கை வலியோ, உடல் வலியோ, மனசு வலியோ புரிந்து  கொள்ளுங்கள்
உங்கள் மகளை
கவனிப்பது போல் உங்கள் மனைவியையும் 
கவனித்து கொள்ளுங்கள்
உடல் மனசு இரண்டையும்
மென்மை படுத்துங்கள்
சமையலை பாராட்டுங்கள்
அவள் சமையல் அறையில்
பட்டிருக்கும் வெப்பம் தொட்ட தழும்பைப் பாருங்கள். அவை உங்களுக்காக
அவள் பட்ட அன்பின் சின்னம்.
அவள் செய்வது சமையல்
அல்ல. அன்பின் அழகு.
தினசரி நன்றி சொல்லுங்கள்.
குறுந்தகவல்களை மனைவிக்கும்
அனுப்பலாமே
அவள் குடும்பத்திற்காக
எரியும் இன்னொரு
மெழுகுவர்த்தி.
வாழ்க்கை முழுதும் கூட வரும்
அன்பு தேவதை
கடவுள் நம்முடன்
இருக்கமுடியாது என்பதற்காக
கடவுள் கொடுத்த வரம்
அன்னையும் மனைவியும்
அவள் கண்களில் கண்ணீர்
வராமல் பார்த்து கொள்ளுங்கள்.
மூன்றாவது கையாக நீங்கள் இருங்கள். பெண் கண்ணீர் விட்டால் அங்கே செல்வம் தங்காது.
புரிந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கையை நீங்களும் அழகாய் வாழலாம்


Post a Comment

0 Comments