HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

#சிவனடியார்கள் #தங்கள் #வாழ்வில் #மறக்ககூடாதது #எது??

#சிவனடியார்கள் #தங்கள்
#வாழ்வில் #மறக்ககூடாதது #எது??
சிவபெருமானை தவிர எனது
கண்கள் வேறொதுவும் பார்க்காது,
செவிகள் கேட்காது கைகள் கூப்பாது, கால்கள் நடக்காது, மனம் நினைக்காது என்ற உரைப்புத் தன்மை ஒவ்வொரு சிவனடியாருக்கும் இருக்க வேண்டும்
நமது சமய குரவர்கள், சந்தான குரவர்கள்,
63 நாயன்மார்கள், 9 தொகை அடியார்கள், திருமுறை அருளாளர்கள் பின்பற்றிய சைவ சமய நெறிகளையும், சைவ சித்தாந்த நெறிகளையும் நாமும் பின்பற்றி வாழ்ந்து காட்ட வேண்டும்
நாம் முறையாக தலம், தீர்த்தம், மூர்த்தம் ,இந்த மூன்றையும் வழிபடுவோர்களுக்கு சற்குரு வாய்ப்பார் ஒவ்வொரு ஆன்மாவும் ( உயிரும்) ஈடேறுவதற்கு குரு அவசியம் ஆகும் குருவிடம் முறையாக தீட்சைப் பெற்று நமது தினந்தோறும் வழிபாடுகளை செய்ய வேண்டும் குருவருள் இருந்தால் தான் திருவருள் ( சிவபெருமான்) பெற முடியும் ஆகவே நமக்கு ஒவ்வொருவருக்கும் குரு அவசியம் இருக்க வேண்டும்
நாம் வாழ்நாளில் பாடல் பெற்ற தலங்கள், பாடல் பெறாத தலங்கள், வைப்புத் தலங்கள் போன்ற எல்லா தலங்களையும் தரிசனம் செய்து வழிபட வேண்டும் நாம் எப்போதும் எல்லா உயிர்களிடத்தும் அன்பாகவே இருக்க வேண்டும் மேலும் எல்லா உயிர்களையும் சிவமாகவே எண்ணுதல் வேண்டும்.
சிவனடியார்கள் இடத்தும் சிவபெருமான் இடத்தும் நாம் உண்மையாகவே இருக்க நினைக்க வேண்டும். நம்மால் முடிந்த உதவிகளை சிவனடியார்களுக்கும், திருக்கோவில் களுக்கும் குரு பூஜைகளுக்கும் அன்னப்பாளிப்புகளுக்கும் ( திருவமுது செய்வதற்கும்) உழவாரம் செய்வதற்கும் கொடுத்து உதவ வேண்டும். நம் இல்லத்திற்கு அடியார்கள் வந்தால் அவருக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு உபசரிக்க வேண்டும்
மேலும் சிவனடியார்களுக்கு வஷ்த்திரம் ( வேஷ்டி துண்டு) கொடுப்பது மிகவும் சிறப்பாகும். சிவனடியார்களுக்கு நமது சொத்தாகிய விபூதி ( திருநீறு) பிரசாதம் கொடுப்பதும், உருத்திராக்க மாலை கொடுப்பதும், கண்டமணியை கொடுப்பதும் சிறந்த சிவப்பணியாகும்.
பன்னிரு திருமுறைகளையும் ஞானாசிரியர் துணைக்கொண்டு பொருள் உணர்ந்து படிப்பது மிகவும் சிறந்ததாகும். முதலில் திருத்தொண்டர் புராணம் ( பெரிய புராணம்) ஞானைசிரியர் மூலம் ஒவ்வொரு நாயன்மார்களையும் பற்றியும் அவர்கள் செய்த தொண்டுகளையும் கதையாகவோ, நாடகமாகவோ, புராணமாகவோ சிந்திக்க வேண்டும்.
மெய்யடியார்களுக்கு திருவேடம் மிகவும் முக்கியமானது ஆகும் திருவேடம் என்பது கழுத்தில் கண்டமணியும் ( ஐந்துமுக உருத்திராக்கம்) எப்போதும் இருக்க வேண்டும் நெற்றியில் திருநீறும் மனதில் பஞ்சாக்கர ( சிவாயநம) மந்திரமும் இந்த மூன்றும் எப்போகும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
நாம் வருடத்திற்கு ஒரு முறை குருவிற்கு காணிக்கை செலுத்துவது மிகவும் நல்லது ஆகும். நமது வருமானத்தில் ஆறில் ஒரு பங்கு குருவிற்கும் சிவபெருமானுக்கும் தொண்டு செய்வதற்காக சேமித்து வைக்க வேண்டும். 
நாம் புதியதாக கோயிலை கட்டுவதை
விட புராண காலத்து சிதிலடைந்த திருக்கோவிலுக்கு நம்மால் இயன்ற பொருளுதவியோ அல்லது உடலுதவியோ செய்து பிறந்த பிறவியின் பயனை பெறுவோம். நமது பகுதிகளில் இருக்கும் அடியார்களை ஒன்று திரட்டி திருமுறைகளி லிருந்தும் சாத்திரங்களிலிருந்தும் கலந்துரையாடல் மூலம் நாம் சிந்திப்பது மேலும் நமக்கு ஞானத்தை ( அறிவுவிளக்கம் ) கொடுக்கும்.
நமக்கு என்ன சிவபெருமான் கொடுக்கிறாரோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நமக்கு வர வேண்டும் மேலும் நாம் படிநிலைகளில் இருந்து ஞான நூல்களையும், ஞான உபதேசங்களையும் பெற வேண்டும். நமக்குள் இருக்கும் யான், எனது, என்ற செருக்கு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிவன் அவன் என் சிந்தையுள் நின்றதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று நாம் எப்போதும் இருக்க வேண்டும். குருவே சிவம் சிவமே குரு என்று எப்போதும் மனதில் நினைத்துக் கொண்டிருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். 
மெய்யடியார்களை எப்போதும் நாம்  சிவமாகவே பார்க்க வேண்டும். எல்லாம் அவன் செயல் சிவன் செயலே என கருதி நாம் எப்போதும் சைவ சமய நெறிகளிலும், சைவ சித்தாந்த நெறிகளிலும் நின்று வாழ்தலே உண்மையான சிவ வழிபாடு ஆகும்.
ஓம் நமசிவாய.

Post a Comment

0 Comments